பீளமேடு காவல் நிலையத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - காவலர்களுக்கு ராக்கி அணிவித்த மாணவர்கள்

கோவை பீளமேடு காவல் நிலையத்தில் ரொட்டராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி மாணவர்கள் காவலர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினர். காவலர்களுக்கு ராக்கி அணிவித்து, இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் E2- பீளமேடு காவல் நிலையத்தில் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. ரொட்டராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி தன்னார்வ மாணவர்கள் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுடன் இந்த திருநாளை கொண்டாடினர்.



நாட்டின் பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் காவலர்களுக்கு தங்களது ஆதரவையும், அன்பையும், மரியாதையையும், நன்றியையும் தெரிவிக்கும் விதமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாணவ சகோதரிகள் ராக்கிகளை கட்டினர்.



மேலும், காவலர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளித்ததோடு, சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தியது. காவல்துறையின் அர்ப்பணிப்பான சேவைக்கு சமூகத்தின் நன்றியை தெரிவிக்கும் தருணமாகவும், மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்தது.



நிகழ்ச்சியின் போது, சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை காவல்துறையினர் எடுத்துரைத்தனர். நாட்டிற்காக அயராது உழைக்கும் காவலர்களுடன் இந்த சகோதரத்துவ தினத்தை கொண்டாடியது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக டெக்சிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பீளமேடு காவல்துறை அதிகாரிகள், ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டெக்சிட்டியின் தலைவர் ஜெய்சீலன்.ப, செயலாளர் ருத்ரா.ம, நிகழ்வு தலைவர் கல்பனா.ஜெ, உறுப்பினர்கள் பிரபஞ்சனி.ம மற்றும் சஞ்சய் பிராணவ்.ஜெ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...