கிணத்துக்கடவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி நியாயவிலைக் கடையை ஆய்வு செய்தார். திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனும் உடனிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரமும் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மாஸ்திகவுண்டன்பதி நியாயவிலைக்கடையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்களுடன் இணைந்து கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் இன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.



இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரசாமி எம்.பி, இன்று கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.





இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, நியாயவிலைக் கடையின் செயல்பாடுகள், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து எம்.பி ஈஸ்வரசாமி கேள்விகள் எழுப்பினார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...