கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம், NO 24 வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி பகுதி மற்றும் பன்னிர்மடை பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் கலந்து கொண்டு, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்வு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் பேரிலும், முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணியின் ஆலோசனையின் பேரிலும் நடைபெற்றது.



அதேநாளில், துடியலூரை அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார். அவருடன் ஊர் பொதுமக்களும், அதிமுக கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...