கோவை தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெருவிளக்கு ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் தெருவிளக்குகளை ஆய்வு செய்தார். பழுதடைந்த விளக்குகளை சரி செய்யவும், முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் 19.08.2024 அன்று இரவு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 99 போத்தனூர் மெயின் ரோடு, பத்மாலயா லே-அவுட் மற்றும் வார்டு எண் 96 குறிச்சி பொள்ளாச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சரி செய்யவும், தெருவிளக்குகளை முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், அஸ்லம் பாஷா, குணசேகரன், உதவி பொறியாளர்கள் சபரி ராஜ், சுந்தர்ராஜ், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



இந்த திடீர் ஆய்வின் மூலம், தெருவிளக்குகளின் நிலை குறித்து நேரடியாக அறிந்து கொண்ட ஆணையாளர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தெருவிளக்குகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...