கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

கோவை கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ரங்கராஜ், நேற்று (ஆகஸ்ட் 18) வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், போலீஸ்காரர் ரங்கராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரங்கராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், போலீஸ்காரரிடம் தகராறு செய்ததாக கரும்பு கடை சேரன் நகரைச் சேர்ந்த ஹக்கீம் (வயது 37), சர்புதீன் (வயது 35), சுண்டக்காமுத்தூர் ஹரிரவேந்தரா (வயது 21), உக்கடம் பிலால் எஸ்டேட் அன்சர் (வயது 28), செல்வபுரம் ஆதிபதி (வயது 24), கரும்புக்கடை சாரமேடு முகமது அஜ்மல் உசைன் (வயது 34) ஆகிய 6 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...