கோவையில் நடைபெற்ற ஐசிடி அகாடமியின் பிரிட்ஜ் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

கோவையில் ஐசிடி அகாடமியின் 57வது பிரிட்ஜ் மாநாடு நடைபெற்றது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வித் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.



Coimbatore: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆகஸ்ட் 20 அன்று ஐசிடி அகாடமியின் 57வது பதிப்பான பிரிட்ஜ் மாநாடு நடைபெற்றது. 'தமிழ்நாடு - தி குளோபல் ஸ்கில் கேபிட்டல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஆர் கண்ணன், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், பஹ்வான் சைபர் டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.முரளிதரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



திறன் மேம்பாடு மற்றும் சிறந்து விளங்கும் பணியாளர்களின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பாடத்திட்டத்தை பட்டியலிடும் நோக்கத்துடன் இந்த மெகா தொழில் நிறுவனத் தொடர்பு நிகழ்வு நடந்தது. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பாக இந்த மாநாடு அமைந்தது. பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்குள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும் இம்மாநாடு வழிவகுத்தது.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த மாநாடு சிறப்புமிக்கதாக இருப்பதாகவும், மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்சரின் அறிக்கையை எதிரொலிப்பதாகவும் தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



இம்மாநாட்டில் புதுமையான மற்றும் லட்சிய முயற்சிகள் மூலம் உயர்கல்வித் துறையில் சாதனைகள் புரிந்த கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 'ICT Academy Education changemaker Award 2024' வழங்கி கௌரவித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.ஏ.என்.வி.நடராஜன், டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தவமணி டி.பழனிசாமி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி இயக்குனர் வினோத், அன்னபூரண பொறியியல் கல்லூரி தலைவர் சந்திரசேகர் ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர்.

பல்வேறு தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...