பொள்ளாச்சியில் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் கலைஞருக்கு புகழஞ்சலி

பொள்ளாச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் அருந்ததியருகளுக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடுக்கு பெற காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல குழுவின் மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...