கோவையில் 23 கடைகளில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் 253 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாத 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு காந்திபுரம், வ.உ.சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் நடத்தப்பட்டது.



மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர்கள் அடங்கும். இந்த ஆய்வின் போது, 23 கடைகளில் காலாவதியான மற்றும் முழுமையான லேபிள் விபரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கருத்து தெரிவிக்கையில், காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் குளிர்பானங்கள் வாங்கும் போது அவற்றின் காலாவதி தேதியை கவனமாக சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...