கோயமுத்தூர் முன் சொந்தமான இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் 6வது பொதுக்குழு கூட்டம்

கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பகுதியில் கோயமுத்தூர் முன் சொந்தமான இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் 6வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொழில் சிக்கல்களை தீர்க்க, காப்பீடு வழங்க, ஒற்றுமையை வலியுறுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ரெசார்ட்டில் கோயமுத்தூர் முன் சொந்தமான இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் 6வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ்குமார், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சங்கத்தின் முன்னாள் செயலாளர் மாணிக்கம் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழில் ரீதியாக ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய சங்கம் முன்னின்று ஒத்துழைப்பது, அனைவருக்கும் காப்பீடு ஏற்பாடு செய்து கொடுப்பது, சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து சங்க வளர்ச்சிக்கு பாடுபடுதல், அரசு ஆர்.டி.ஓ இடர்பாடுகளை சரிசெய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

30 வருடங்களுக்கு மேல் இதே தொழிலை செய்துவரும் சங்க மூத்த உறுப்பினர்களுக்கு தொழில் சாதனையாளர் விருதுகளும், சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அங்கீகார விருதுகளும், சிறப்பாக செயல்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த நிர்வாகிகள் விருதுகளும் வழங்கப்பட்டன.



லக்கி டிரா பரிசுப்போட்டிகளும் நடத்தப்பட்டன. குலுக்கல் முறையில் வெற்றிபெற்ற 51 உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக எல்.சி.டி டிவி, இரண்டாம் பரிசாக தங்க நாணயம், மூன்றாம் பரிசாக வெள்ளி நாணயம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வீட்டு உபயோக உபகரணங்கள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் துணைத்தலைவர்கள் சுரேஷ், கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் வெங்கடேஷ், சங்க செயற்குழு உறுப்பினர்கள், கௌரவ ஆலோசகர்கள் செபாஸ்டின் ஜோஸ், நாகராஜன், கிருஷ்ணராஜ், முகமது ரபி, சரவணன், ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ ஜெயராஜ், தினேஷ், சஜித் ரகுமான், நந்தகுமார், ராஜேந்திரன், சிவகுமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...