கோவை விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து வலியுறுத்திய வானதி சீனிவாசன்

கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், பல்லடுக்கு வாகன நிறுத்தகம், மாஸ்டர் பிளான், பட்டா வழங்கல், நொய்யல் நதி மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தினார் வானதி சீனிவாசன்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலத்தை நிபந்தனைகள் இல்லாமல் மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

வானதி சீனிவாசனுடன் மாநில நிர்வாகிகள் பேராசிரியர் கனகசபாபதி, சுமதி வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர். முக்கியமாக, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் 1300 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட தயாராக உள்ளதாகவும், தமிழக அரசின் நிபந்தனைகளால் இத்திட்டம் தாமதமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வேகப்படுத்துதல், கோயம்புத்தூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தை முழுமையாக செயல்படுத்துதல், ராஜவீதி, காந்திபுரம் மற்றும் டவுன்ஹால் பகுதிகளில் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைத்தல், காந்திபுரம் மேம்பாலத்தில் கூடுதல் சாய்வுதளம் அமைத்தல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

மேலும், கோவை நகரப் போக்குவரத்தை ஒருங்கிணைக்க தனி ஆணையம் அமைத்தல், தியாகி குமரன் மார்க்கெட் வளாகத்தை நவீனமயமாக்குதல், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளானை செயல்படுத்துவதற்கு முன் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிதல் ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.

உக்கடம் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட சி.எம்.சி காலனி மக்களுக்கு வீடு வழங்குதல், வெரைட்டி ஹால் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துதல், சுங்கம் காந்திநகர், ஹைவே காலனி, அம்மன்குளம், மசால்லே அவுட் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

கோவை மாநகரத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்தல் போன்ற கோரிக்கைகளையும் வானதி சீனிவாசன் முதல்வரிடம் முன்வைத்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரின் கவனத்தை ஈர்த்து, விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...