கோவை மாநகராட்சி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சியின் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் 1587 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.





வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 810 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 16 பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த 107 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 360 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 17 மாணவர்கள் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.



12-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 119 ஆசிரியர்கள், 10-ம் வகுப்பில் பாட வாரியாக 100% தேர்ச்சி அளித்த 117 ஆசிரியர்கள், கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 10 நபர்கள், மற்றும் IIT திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெற்ற 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 1587 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் சுழற்கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மண்டலக்குழுத் தலைவர்கள், மாநகர நல அலுவலர், மாநகர கல்வி அலுவலர், நகரமைப்பு அலுவலர், மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...