கடன் வசூலுக்கு கொலை மிரட்டல்: குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

கோவை குனியமுத்தூரில், கடன் திருப்பிச் செலுத்தக் கோரி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய சாந்து முகமது, தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சாந்து முகமது. இவரது மகன் ஹபிப் ரஹ்மான் ஸ்கிராப் தொழில் செய்து வந்துள்ளார். ஸ்கிராப் தொழில் மட்டுமின்றி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்று, தேவைப்படும் நபர்களுக்கு கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹபிப் ரஹ்மானின் மனைவியும் மகளும் நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்து விடவே மன உளைச்சலில் இருந்த ஹபிப் ரஹ்மான் தொழில் செய்ய முடியாமலும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமலும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஹபிப் ரஹ்மான் கடனாக பெற்றதில் பெரும்பகுதியை திருப்பிக் கொடுத்த பின்னரும் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடன் கொடுத்த நபர்கள் மருத்துவமனைக்கு வந்து முழுக் கடன் தொகையும் திருப்பிக் கொடுக்கும்படி ஹபிப் ரஹ்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஹபிப் ரஹ்மான் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களின் கைகளை முறுக்கி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து ஹபிப் ரஹ்மானின் தந்தை சாந்து முகமது உடனடியாக இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் அந்தப் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.



எனவே சாந்த முகமது, தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தனது குடும்பப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

ஹபிப் ரஹ்மான் கூறுகையில், "தொழில் செய்வதற்காக 15 நபர்களிடம் பணம் பெற்றிருந்தேன். மூன்று ஆண்டுகளாக பணம் பெற்ற நபர்களுக்கு வட்டி செலுத்தி வந்தேன். என் மனைவியும் மகளும் இறந்த பிறகு மன உளைச்சலில் இருந்த என்னால் வட்டி செலுத்த முடியவில்லை. தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தேன். இதனிடையே பணம் கொடுத்த நபர்கள் எங்கள் வீட்டு பெண்களின் கைகளை முறுக்கி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். 15 நபர்களிடம் மூன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றிருந்தேன். கடனாக பெற்றதில் பெரும்பகுதியை திருப்பிக் கொடுத்த விட்டேன். ஆனால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நான் பணம் செலுத்தாதது போல் மொத்த தொகையையும் திருப்பிக் கொடு என்று மிரட்டுகிறார்கள்." என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நான் 15 நபர்களிடம் மட்டும் தான் கடன் பெற்றேன். ஆனால் வாட்ஸ் அப் குழுக்களில், 60க்கும் மேற்பட்ட நபர்களிடம் 11 கோடி வரை நான் கடன் பெற்றுள்ளதாக பரப்பி வருகிறார்கள். அதன் அடிப்படையில், சிலர் எனக்கு பணம் கொடுத்ததாக பொய் கூறி பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்." என்று அவர் கூறினார்.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...