கோவையில் ஜீவாவின் 118வது பிறந்தநாள்: மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சிலைக்கு மரியாதை

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஜீவா இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவையில் மறைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமரர் ஜீவாவின் 118வது பிறந்தநாள் இன்று (21.08.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், ஜீவா இல்லத்தில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அமரர் ஜீவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த இலக்கியவாதி, மேடை பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். மகாத்மா காந்தி அடிகளால் "நாட்டின் சொத்து" என்று பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் என். பெரியசாமி, மாவட்ட செயலாளர் சி. சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜேம்ஸ், எம். குணசேகர், மாவட்ட பொருளாளர் சி. தங்கவேல், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. மௌனசாமி, ஆர். துரைசாமி, சாந்திசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இஸ்கப் மாநிலப் பொருளாளர் எஸ். கோட்டியப்பன், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் என். செல்வராஜ், பி. சுப்ரமணியன், கே. புருசோத்தமன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் ஏ. அஸ்ரப்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிழக்கு மண்டல செயலாளர் எஸ். சண்முகம், சூலூர் வடக்கு செயலாளர் பி.எஸ். ராமசாமி, மேற்கு மண்டல செயலாளர் என். சந்திரன், மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி. மணிபாரதி, மதுக்கரை தங்கராஜ், சூலூர் கண்ணன், அன்னூர் செல்வராஜ், ஆனைமலை எஸ். காளீஸ்வரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...