போத்தனூரில் கனமழையிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள்

கோவை போத்தனூரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மழையிலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி பணியாற்றினர். இவர்களின் அர்ப்பணிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றது.



Coimbatore: கோவை போத்தனூரில் இன்று காலை திடீரென கனமழை பொழிந்தது. இதனால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

காலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த மின் தடையை சரிசெய்ய, அங்கிருந்த உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஏறினர். கொட்டும் மழையிலும் தங்களது பணியை மேற்கொண்ட இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மழை வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்திலும் தங்களது கடமையை செவ்வனே ஆற்றும் மின்வாரிய ஊழியர்களின் பணி நேர்மையும், அர்ப்பணிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...