பொள்ளாச்சியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்; விற்பனை மந்தம் குறித்து உற்பத்தியாளர்கள் கவலை

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கோவை: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சாவேலம்பட்டியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



மூன்று அடி முதல் 10 அடி வரையிலான அளவுகளில் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப்பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



ஆனால், வழக்கமாக பத்து மாதங்களாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே விறுவிறுப்பாக விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே காணப்படுவதாக தயாரிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு, காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விநாயகர் சிலை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட சிலைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.



இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே மக்கள் விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...