தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார். கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.


சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சித் தலைவர் விஜய் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.





இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜய், "இன்று நம் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அதுதான் நம் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நாள், நேரத்தை அறிவிப்பேன்," என்றார்.

மேலும் அவர், "இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதையும், நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை மாநாட்டில் சொல்வோம்," என்று குறிப்பிட்டார்.



த.வெ.க கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள், இரட்டை யானைகள், மையத்தில் வட்ட வடிவத்துக்குள் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொடி குறித்தான விளக்கத்தை வரவிருக்கும் மாநாட்டில் தெரிவிப்பதாக விஜய் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...