பொள்ளாச்சியில் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: வேட்புமனுக்கள் தாக்கல்

பொள்ளாச்சி அருகே ஆழியார் பாசன திட்டத்தின் ஓடையகுளம் கிராம நீர் பயனாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பாசன திட்டத்தில் குளப்பத்துக்குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் மற்றும் ஓடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் 4 ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரிடம் காலை முதல் இந்த தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.



தற்போது வரை தலைவர் பதவிக்கு வேட்டைக்காரன் புதூர் பகுதி சேர்ந்த விசாகபதி, ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகளுக்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன், ஓடையக்குளம் பகுதி சேர்ந்த சந்துரு, ஆனைமலை பகுதி சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஆழியார் அணை பாசன சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் வேட்புமனு செய்தனர்.



தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. வரும் 31ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தலைவர் பதவிக்கு ஒருவரும், நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...