உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏல வாக்குவாதம்: ஏலம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சியில் வார சந்தை ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொங்கல் நகரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 2024 ஆகஸ்ட் 22 முதல் 2025 ஆகஸ்ட் 21 வரை காய்கறி சந்தை நடத்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் இன்று காய்கறி சந்தை ஏலம் நடைபெறும் என ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் பத்தாயிரம் ரூபாய் தொகையை ஊராட்சியின் பெயரில் டிடியாக எடுத்து ஊராட்சி அலுவலகத்தில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொங்கல் நகரம் ஊராட்சியைச் சேர்ந்த ராமலிங்கம், செந்தில் குமார், சுரேஷ், தனபால் ஆகிய நான்கு பேர் ஊராட்சி செயலாளர் மகாலிங்கத்திடம் டிடியை வழங்கினர். ஆனால், ஏலம் துவங்குவதற்கு முன் ஏலம் எடுக்க வந்த நான்கு பேருக்கு ஆதரவாக உடன் வந்தவர்கள் கூச்சல் குழப்பம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் இன்று நடைபெற இருந்த வாரச்சந்தை ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். கொங்கல் நகரம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...