தாராபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் திறப்பு; மீனவர்களுக்கு குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கல்

தாராபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. 19 மீனவர்களுக்கு குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி, சின்னக்கடைவீதியில் உள்ள தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான இந்த பயிற்சி நிலையம், அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள், நடைமுறைகள், கூட்டுறவு சட்டம், விதிகள், கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றில் பயிற்சி அளிக்கும். இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் பயனடைவார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1167 நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 805 விற்பனையாளர்கள் இந்த பயிற்சி நிலையத்தின் மூலம் கூட்டுறவு பட்டய பயிற்சி பெற்று பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. மேலும், இப்பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்வதன் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும்.



அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 19 மீனவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு மொத்தம் ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்.



இதில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினருக்கு 40 மற்றும் 60 சதவீத மானியமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4- மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்றத் தலைவர் பப்புக்கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், திமுக நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், நகர துணை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி, சரஸ்வதி மற்றும் துணைப்பதிவாளர் முதல்வர் செ.பழனிச்சாமி, மீன் வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ்மின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...