அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை சூலூரில் நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நடிகை நமீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார். கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏழாவது ஆண்டாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு 2,490 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக, சக அரசியல்வாதியாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்க்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

கோவைக்கான திட்டங்கள் குறித்து பேசிய அவர், "தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே கருத்து கூற முடியும்," என்று தெரிவித்தார்.

தி.மு.க-பா.ஜ.க இடையிலான ரகசிய கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி பார்வையில் பார்ப்பது தவறானது. அரசாங்கங்களுக்குள் உள்ள உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது," என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...