அவினாசி அத்திகடவு திட்டம்: பாஜக பெருமை கொள்வது நியாயமற்றது - கொமதேக தலைவர் ஈஸ்வரன் விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கொமதேக தலைவர் ஈஸ்வரன், அவினாசி அத்திகடவு திட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு இல்லை என்றும், மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்.



Coimbatore: கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் அவினாசி அத்திகடவு திட்டம் குறித்து பேசினார்.

அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டத்தின் விளைவு என்றும், 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இத்திட்டத்திற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும் ஈஸ்வரன் கூறினார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இத்திட்டத்தை கவனிக்கவில்லை என்றும், கொமதேக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 2016-ல் அதிமுக அரசு ஆய்வுக்கு 3 கோடி ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.



"அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்றிருந்தது. எடப்பாடியார் இந்த திட்டத்தை துவங்கியதற்கு அனைத்து தரப்பு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று ஈஸ்வரன் கூறினார். தற்போதைய திமுக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

பாஜக தலைவர்களின் கூற்றுகளை விமர்சித்த ஈஸ்வரன், "ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தாங்கள்தான் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல் பேசுகின்றனர். பெருமையில் மட்டும் பங்கு கேட்கின்றனர்," என்றார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு பாஜக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஈஸ்வரன், "பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங்களை வாங்கிக் கொடுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...