கோவை மேயர் கணபதி பகுதியில் ஆய்வு: பாதாள சாக்கடையை உடனடியாக தூர்வார உத்தரவு

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் கணபதி, மோர் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாதாள சாக்கடையை உடனடியாக தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வடக்கு மண்டலம் வார்டு எண் 30க்குட்பட்ட கணபதி, மோர் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் நிலையை நேரில் பார்வையிட்ட மேயர், அதனை உடனடியாக தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மேயருடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் சரண்யா, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த திடீர் ஆய்வின் மூலம், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை உறுதி செய்வதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருவது தெரிய வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...