கோவை பள்ளி மாணவர்கள் சந்திராயன் 3 தரையிறக்கத்தை தத்ரூபமாக சித்தரித்து அசத்தல்

கோவையில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியில், சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள் சந்திராயன் 3 நிலவு தரையிறக்கத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 165 தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



Coimbatore: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியில், மாணவர்கள் சந்திராயன் 3 விண்கலத்தின் நிலவு தரையிறக்கத்தை தத்ரூபமாக சித்தரித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், மாணவர்கள் சந்திராயன் 3 விண்கலம் மெதுவாக நிலவில் இறங்குவதையும், அதனைத் தொடர்ந்து ரோவர் வாகனம் வெளியே வருவதையும் மிகத் துல்லியமாக வடிவமைத்திருந்தனர்.



கண்காட்சியில் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை, லேண்டர், ரோவர், சூரிய ஒளியில் இயங்கும் கார் ஆகியவை இடம்பெற்றன. மேலும், மோட்டார் பம்பு வடிவமைப்பு, கிராமசபை, நீதிமன்ற நிகழ்வுகள், பண்டைய கால தமிழர்களின் கலை கலாச்சாரம், ஆங்கிலத்தின் சிறப்பு, நாடகம், மருத்துவத்துறை, தாவரவியல், வேதியியல், விளையாட்டு, யோகா மற்றும் கணித புதிர்கள் உள்ளிட்ட 165 விதமான தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.



இந்த கண்காட்சியைக் கண்டு வியந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை நேரில் கண்ட அனுபவம் போல இருந்ததாகத் தெரிவித்தனர். இந்த முயற்சி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதோடு, நாட்டின் விண்வெளி சாதனைகளை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...