தாராபுரம் அருகே அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அவிமுக்த சுவேத கணபதி திருக்கோவில் மற்றும் பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் திருக்கோவிலின் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த 75 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலின் சிற்பங்கள் காசியில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவை. விழாவின் போது கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன சாத்துதல் நிகழ்ச்சியுடன் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.



யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, முதலில் அவிமுக்த சுவேத கணபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டக்காரர் பெரியண்ணா வேணாவுடையார் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தாராபுரம், சங்கரண்டாம்பாளையம், நொச்சிபாளையம், குள்ளகாளிபாளையம், ஆலம்பாளையம், ஊதியூர் குண்டடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால், ஊர் பொதுமக்கள், லக்கமா நாயக்கன்பட்டி தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையிலான 11 அர்ச்சகர்கள், மற்றும் கோவில் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...