கணியூரில் கலைஞர் சிலைக்கு திமுகவினர் மரியாதை - பொள்ளாச்சி நகர செயலாளர் மற்றும் நகரமன்ற தலைவர் தலைமையில் அஞ்சலி

கணியூரில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் கணியூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்களால் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக நிர்வாகிகள் ச.தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா அக்பர் M.C, ஸ்வீட் நாகராஜ் M.C ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பொள்ளாச்சி நகரத்தின் வட்ட கழக செயலாளர்களான வெங்கிடுசாமி, கண்ணன், விஜயகுமார், ஜெகதீசன், சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

திமுக சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்களான வழக்கறிஞர் பஞ்சலிங்கம், கராத்தே ராஜா, சானவாஸ், விஜயகாயத்ரி M.C, சைஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர்களான போர்வெல் துரை, கவிதா, பாலமுருகன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இதுமட்டுமின்றி, நகர கழக முன்னனியினரான VMK நாகராஜ், பாரூக் பாய், PNR அஸ்வின், பட்டாளமணிகண்டன், போட்டோ பாபு, பொள்ளாச்சி மாசி, மணிகண்டன், டாக்டர் சங்கர், அபுபக்கர், விக்னேஷ்வரன், V.S.சுபாஷ், உதயசூரியன், தளபதி குமார், தம்பு, அப்பாஸ், பிரசாந்த், சரவணபிரதீப், D.நவீன்குமார், சஜித் கான், சுகாஷ் பிரபு, பொம்மு, தெய்வா என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...