கோவை ஆனைகட்டியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்: நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் பயனடைந்தனர்

கோவை தடாகம் அருகில் உள்ள ஆனைகட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று, மலைவாழ் கிராம மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.



கோவை: கோவை தடாகம் அருகில் உள்ள 24.வீரபாண்டி ஊராட்சியின் ஆனைகட்டி பகுதியில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் ஆனைகட்டியைச் சுற்றியுள்ள மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.



அவர் பொதுமக்களுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார் மற்றும் மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



இந்த முகாமிற்கு ஊராட்சித்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், அவைத்தலைவர் ஆனைகட்டி மதன், முன்னாள் துணைத்தலைவர் சி.செல்வராஜ், நஞ்சுண்டபுரம் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், சோமையம்பாளையம் ஆனந்தகுமார், கே.சி.கே தனகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.



இதில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, கால்நடைப் பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளம், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவை அடங்கும்.

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மோகன், செல்வன், தீபா, பிரியங்கா, திமுக கட்சி நிர்வாகிகள் ஏ.வி.செல்வராஜ், மருதமணி, விஜயகுமார், வீரபாண்டி கோபால், பாலன், சுந்தரராஜ் உள்ளிட்ட பலரும் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.

வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைக்கட்டி, தூவைப்பதி, பனப்பள்ளி, கண்டிவழி, தூமனூர், சேம்புகரை, ஜம்புகண்டி, ஆலமரமேடு, மருந்தங்கரை உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...