கோவையில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 19வது ஆண்டு மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநில அளவிலான கருத்தரங்கம் இது 19வது ஆண்டாக நடைபெறுகிறது.



கோவையில் இது மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



முதல் நாள் கருத்தரங்கில், இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகமான மைக்ரோ பயோலாஜிக்கல் லேப் மணி, பி.எஸ்.ஜி. மெடிக்கல் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



கண்காட்சியை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



25க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்த நிறுவனங்களின் ஸ்டால்களில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஆய்வக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆய்வக விநியோகஸ்தர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாநில அளவிலான ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கோவை ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் நரேந்திரகுமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அறிவுநந்தன் ஆகியோர் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...