பல்லடத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க திட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் நிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மாணிக்கபுரம் சாலையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை மீட்க அங்காளம்மன் கோயில் குழுவினர் இந்து அறநிலைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால், இந்து சமய அறநிலைத்துறையின் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு வராததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும், வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...