தென் மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நமோ ட்ரோன் திட்ட ஆய்வுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தென் மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நமோ ட்ரோன் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் கூட்டு செயலாளர் திருமதி.எஸ்.ருக்மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (SMAM) மற்றும் நமோ ட்ரோன் திட்டம் குறித்த பிராந்திய ஆய்வுக் கூட்டம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கூட்டு செயலாளர் திருமதி.எஸ்.ருக்மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் அதிக எண்ணிக்கையிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் பண்ணை இயந்திர வங்கிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசின் உழவர் செயலியை பாராட்டிய அவர், விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள்/உபகரணங்கள் சேர்க்கப்பட வேண்டியவை குறித்தும் மாநிலங்களுடன் விவாதித்தார்.

தமிழக வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர், சிறு மற்றும் குறு விவசாயிகளை சென்றடையும் வகையில் பண்ணை சக்தி கிடைக்கும் தன்மையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கூட்டு செயலாளர், மாநிலங்களில் இயந்திரமயமாக்கல் நிலையை ஆய்வு செய்யுமாறும், சென்னையில் உள்ள மாநில வேளாண் இயந்திர தகவல் தரவு மையத்திற்கு மாநில அதிகாரிகள் வருகை தருமாறும் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் விவசாய இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தை RKVY திட்டத்திலிருந்து தனித் திட்டமாக கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



நமோ ட்ரோன் திட்டத்தின் கீழ், ட்ரோன் பயன்பாட்டிற்கான பொருத்தமான குழுக்களை தேர்வு செய்தல், முன்னேற்றகரமான குழு அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உள்ள பெண் சுய உதவிக் குழுக்களை (SHGs) தேர்வு செய்தல், ட்ரோன் பைலட் மற்றும் ட்ரோன் உதவியாளர் பயிற்சிக்கான பெண் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல், மாவட்ட வாரியாக ட்ரோன் பயன்பாடு-கிடைக்கும் தன்மை மற்றும் எதிர்கால தேவைகளை மதிப்பீடு செய்தல், முன்னணி உர நிறுவனங்கள் (LFC) மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட்ட பெண் சுய உதவிக் குழுக்களுக்கு வணிக வாய்ப்புகளை உறுதி செய்தல் போன்றவற்றை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டு செயலாளர் வலியுறுத்தினார்.



மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தென் மாநில அதிகாரிகள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள விவசாயி நிலத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி வேலி மற்றும் சூரிய உலர்த்தி அலகு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...