உடுமலை அருகே மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை அருகே மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் ஓட்டத்தை தடுத்து, உடைப்பை சரி செய்தனர். விவசாயிகள் விசாரணை கோரினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.



திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 18ஆம் தேதி முதல் இரண்டாம் மண்டல ஆண்டு பாசனத்திற்கு 4 சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.



உடுமலை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில் மருள் பட்டி கிளை கால்வாய்க்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.



இந்நிலையில், இப்பகுதியில் உள்ள குளத்திற்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது.

விவசாயிகள் கூற்றுப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திருமூர்த்தி அணையில் இருந்து மருள்பட்டி பாசன கால்வாய்க்கு தண்ணீர் வருகின்றது. சில நேரங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும் நிலையில், சில தினங்களாக கால்வாயை உடைத்து தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததை அடைத்தனர்.



பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர்.

முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு யார் அனுமதி வழங்கினார்கள், யார் முறைகேடாக தண்ணீர் திறந்தார்கள் என சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...