வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்: 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



வால்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் வி. அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.பி. வேலுமணி இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கினார். இதையடுத்து, செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழிப்புடன் இருந்து வெற்றி பெற உறுப்பினர்களும் தொண்டர்களும் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "வால்பாறையில் 50 ஆண்டுகாலமாக இல்லாத வளர்ச்சியை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மூலம் வால்பாறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்சி அதிமுக. இக்கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன், ஐடி விங் சசிகுமார், சுடர் பாலு, சலாவுதீன், எம்.ஆர்.எஸ். மோகன், ஆர்.ஆர். பெருமாள், ஆர்.ஆர். சசிகுமார், பழனிச்சாமி, எஸ்.கே.எஸ். பாலு மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...