வரலாற்றுப் பெட்டகமாக திகழும் அஞ்சல் தலைகள்: 'The Philatelists - Coimbatore' கிளப்பின் 212வது சந்திப்பு

கோவையில் 'The Philatelists - Coimbatore' கிளப்பின் 212வது சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. இதில் அரிய அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன, மேலும் பிலடெலி பற்றிய விவாதங்களும் நடைபெற்றன.



கோவை: பிலடெலிஸ்ட்ஸ் என்று அழைக்கப்படும் ஸ்டாம்ப் சேகரிப்பாளர்களின் 'The Philatelists - Coimbatore' கிளப்பிற்கான 212வது சந்திப்பு நிகழ்வு ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.



'The Philatelists - Coimbatore' கிளப்பின் தலைவர் முரளிதரன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் 'The Philatelists - Coimbatore' அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், 'Karnataka Philatelists Society' அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் என 30க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் 'Karnataka Philatelists Society' சேர்ந்த ராமு "96 Blues" என்ற தலைப்பில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் 1854 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரை அணா அஞ்சல் தலைகள் குறித்து விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், கிரேட் பிரிட்டனால் வெளியிடப்பட்ட மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பு மிக்க உலகின் முதல் அஞ்சல் தலையான (Benny Black Stamp) காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், ராமாயண நிகழ்வுகள் குறித்து வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், 1800களில் பிரிட்டிஷ் இந்திய அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் மற்றும் விடுதலைப் போராட்ட தலைவர்கள்நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் என பல அரிதான அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

'The Philatelists - Coimbatore' கிளப்பை சேர்ந்த ஜெய் பரமேஸ்வரன் கூறுகையில், "பிலடெலி என்பது ஸ்டாம்ப் சேகரிப்பு மட்டுமின்றி, ஸ்டாம்ப் பற்றி படிப்பதும் ஆராய்வதும் ஆகும்.'The Philatelists - Coimbatore' கிளப் சார்பாக மாதாந்திர சந்திப்புகள் நடத்தப்படுகிறது. இந்த சந்திப்புகளில் பிலடெலியின் பல்வேறு கூறுகள் பற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், இளம் தலைமுறையினரிடம் பிலடெலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் பயலரங்க கூட்டங்களும் நடத்தப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், சமூக வலைதளம் உள்ளிட்டவைகள் மீது இன்றைய தலைமுறையினர் கவனம் செலுத்துகின்றனர். வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு பிலடெலி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

'The Philatelists - Coimbatore' கிளப்பின் செயலாளர் ஸ்ரீராம் கூறுகையில், "பிலடெலி என்பது ஸ்டாம்பை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி. இதன் மூலம் அந்த ஸ்டாம்ப் வெளியான காலகட்டம் அதன் பின்னணி என பல்வேறு கூறுகளை நாம் அறிந்து கொள்ளலாம். பொது அறிவு பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பிலடெலி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்" என்று அவர் கூறினார்.



வரலாற்று புரிதல் என்பது இன்றைய தலைமுறையினரிடம் குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு அஞ்சல் தலையும் ஒரு வரலாற்றுப் பின்புலத்தை தன்னகத்தே வைத்துள்ளது. எனவே அஞ்சல் தலைகளை சேகரிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அது ஒரு வரலாற்றுத் தேடலாகும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...