கோவை வடக்கு தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் சாயிபாபா காலனி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 25, 2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் சாயிபாபா காலனி பகுதி மற்றும் மணியகாரன்பாளையம் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.



சாயிபாபா காலனி பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டபத்தில் காலை 12 மணிக்கு 18வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள கணபதி மாநகர் பிளாக் -1 இல் 20வது வட்டக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.



இரு கூட்டங்களிலும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில், சாயிபாபா காலனி பகுதி செயலாளர் கே.எம்.ரவி, 18 வது வட்டக் கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன், பகுதி அவைத் தலைவர் சுக்ருல்லா பாபு, வைரமுருகன் mc., வட்டக் கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழக அணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 18 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மணியகாரன்பாளையம் பகுதி செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், 20 வது வட்டக் கழகச் செயலாளர் இரா.புகழேந்தி , மாமன்ற உறுப்பினர் மரியராஜ் MC., மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் சி.வி.தீபா, பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் கழகஅணிகளின்நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், BLA2, பூத்கமிட்டி உறுப்பினர்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், 20 வது வார்டு பொது உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...