விஜயகாந்த் பிறந்தநாள்: கோவையில் தேமுதிக தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். குழந்தைக்கு விஜய பிரபாகரன் பெயரிட்டு, அன்னதானம் வழங்கினர்.


கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தேமுதிக தொண்டர்கள் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கிய புரட்சி கலைஞர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அவரது திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு மற்றும் விஜயகாந்தின் தீவிர ரசிகர் சுலைமான் உள்ளிட்டோர் தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தேமுதிக கொடியேற்றப்பட்டு, விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, ராஜகுரு பாரதி தம்பதியின் ஆண் குழந்தைக்கு விஜயகாந்தின் மகன் பெயரான 'விஜய பிரபாகரன்' என பெயர் சூட்டப்பட்டது. மேலும், அக்குழந்தைக்கு தங்க மோதிரமும் அணிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு தேமுதிக தொண்டர்கள் தங்கள் தலைவரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...