மடத்துக்குளத்தில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூர் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, அரசு போக்குவரத்து கழகம் எல்எல்எப் மாநில துணைத்தலைவர் சி டி சி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹீம் அலி, மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழரசன், கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, மடத்துக்குளம் பிலவேந்தன் கணியூர் பேரூர் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில், கண்ணாடிப்புத்தூர், பெரிய வட்டாரம், கழுகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்விலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...