உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



Coimbatore: உடுமலையில் தேமுதிக நிறுவனர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடுமலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுச்சாமி கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடுமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், உடுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா கருணாகரன் மதிய உணவு வழங்கினார். குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள், துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களும் அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், நகரப் பொருளாளர் தென்றல் யூசுப், உடுமலை ஒன்றியப் பொறுப்பாளர் சுரேஷ், குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா, எரிசனம்பட்டி மாரிமுத்து, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் நகர அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ரவி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...