உடுமலையில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா: புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரி புத்தூர் பகுதியில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சிவசாமியும், துணைத் தலைவர்களாக முருகன் மற்றும் பொன்னுசாமியும், செயலாளராக சுகுமாரன், இணை செயலாளர்களாக சென்னிமலை ராஜேந்திரன் மற்றும் நடராஜ், பொருளாளராக குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நிர்வாக குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, சரோஜா, வைதேகி, பாலசுந்தரி மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



கூட்டத்தில் அமைப்புசாரா துறையில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...