பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி

பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற அரசு பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகிய இருவர் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, சிங்கையன் புதூர் பகுதியில் கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற இருவர் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

விக்னேஸ்வரன் (28) என்ற தேங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளி, தனது உறவினர் பிரபுவின் மகன் விஷ்ணு (அரசு பள்ளி 2ஆம் வகுப்பு மாணவன்) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடினர்.

அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தபோது, இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவன் மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...