கோவையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள்

கோவை அசோகபுரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி கொடியேற்றம், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் நான்கு ரோடு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனரும், திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் தலைமையேற்று, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 35 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் "கேப்டன் புகழ் ஓங்குக" என முழக்கமிட்டனர்.



விழாவின் ஒரு பகுதியாக, 100 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்கையன் ஆகியோர் வழங்கினர். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், என்.ஜி.ஜி.ஓ காலனி கேட், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் வடமதுரை முருகன், சஹூல் அமிது, தங்கதுரை, ஆறுமுகம், விமல்பாலாஜி, சுலைமான், அஜீத், ரமேஷ், பாக்கியராஜ், போனஸ் பாபு, திங்கலூர் பாபு, தனபால், துடியலூர் ரமேஷ், சுடலைமுத்து, கணேஷன், விஜயகுமார், பாலாஜி, சிவா, ஆட்டோ ஆறுமுகம், லட்சுமணன், துரை, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...