கிருஷ்ண ஜெயந்தி: பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி அருகே அங்குலகுறிச்சி மலையில் உள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு உறி அடித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அங்குலகுறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில், சுமார் 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நந்த கோபால்சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



கரடு முரடான பாதைகளைக் கடந்து மலையேறி வரும் பக்தர்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.



இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நந்தகோபால்சாமி மற்றும் பாமா ருக்மணி தாயாரை வழிபட்டனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...