கோவை பன்னீர்மடையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போட்டிகள் கோலாகலம்

கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகள், உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போட்டிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு பூஜைகள், உரியடித்தல் மற்றும் வழுக்குமரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய போட்டிகள் நடைபெற்றன.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேக பூஜை, செண்டை மேளம் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டன.



கோவிலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் குழந்தைகள் ராதா, கிருஷ்ணா வேடமிட்டு கோவிலுக்கு வந்து சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உரியடி போட்டியில், பானையில் பால் தீர்த்தம் ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் உரியை அடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது, இது போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.



அடுத்ததாக, 60 அடி உயரம் கொண்ட வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதற்காக மரத்தின் பட்டையை உரித்து, சோற்றுக்கற்றாழை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைத் தேய்த்து மரம் வழவழப்பாக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



பலர் ஏற முயன்று தோல்வியுற்ற நிலையில், சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, பிரகாஷ் என்ற இளைஞர் மரத்தின் உச்சிக்கு ஏறி, அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்து வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கருடவாகனத்தில் பன்னீர்மடையின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர், பரம்பரை தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...