கோவையில் வறுமையால் பெண் குழந்தையை விற்ற தாய் உள்பட மூவர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற தாய், இடைத்தரகர் மற்றும் வாங்கியவர் என மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்த 25 வயதான ஆதிகணேஷ் மற்றும் அவரது 22 வயதான மனைவி நந்தினி ஆகியோர் வறுமையின் காரணமாக தங்களது பெண் குழந்தையை விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக விற்க முடிவு செய்தனர். இதற்காக கஸ்தூரி பாளையம், சத்யா நகரைச் சேர்ந்த 42 வயதான இடைத்தரகர் தேவிகா என்பவர் உதவியுடன், கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் - அனிதா தம்பதியிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை விற்ற தாய் நந்தினி, இடைத்தரகர் தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், பெண் குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று தேவிகா வேறு யாரிடமாவது குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...