சொந்த காரில் மது அருந்த வருபவர்களுக்கு ஓட்டுநர் வசதி: மது கூடங்களுக்கு கோவை காவல்துறை அறிவுறுத்தல்

கோவையில் மது கூடங்களுக்கு காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகர காவல்துறை, மது கூடங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனத்தில் வரும் மது பிரியர்கள் ஓட்டுநர்களுடன் வந்துள்ளனரா என்பதை மதுபானக் கூட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மது அருந்திய ஒருவர் சொந்த ஓட்டுநர் இல்லாத நிலையில், அவருக்கு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானக் கூட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் அடிப்படையில், ஓட்டுநர் ஒருவர் மது அருந்திய நபரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், மது கூடத்திற்கு வரும் மது பிரியர்களின் வயதையும், அவர்கள் ஏதேனும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது கூடங்களுக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு மது கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் கோவை மாநகர காவல் பகுதிகளில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம் மது அருந்தி வாகனம் ஓட்டும் சம்பவங்களை குறைக்க முடியும் என காவல்துறை நம்புகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...