திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஆய்வு - 18 அம்ச கோரிக்கைகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதன்போது, சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த 18 அம்ச கோரிக்கைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள திருமூர்த்தி மலையில், 960 மீட்டர் உயரத்தில் மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. இந்த சுற்றுலாத் தலத்தில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருமூர்த்தி மலையின் அடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம், வண்ணமீன் காட்சியகம், விளையாட்டுப் பூங்கா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களில் அணை பூங்கா உருவாக்குதல் மற்றும் படகு இல்லம் செயல்படுத்துதல் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் சுற்றுலா துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.



மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சலிங்க அருவி மிகவும் முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு மாதந்தோறும் சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் இந்த சுற்றுலா தளத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம்," என்றார்.



ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக இந்த சுற்றுலாத்தலத்தில் மேம்படுத்த வேண்டிய 18 அம்ச கோரிக்கைகளை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் ECR ரவி அவர்கள் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் அவர்களிடம் வழங்கினார்.



ஆய்வின் போது இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள், சுற்றுலா ஆர்வலர்கள் பிரசாத், நவீன் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...