துடியலூர் அரிமா சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கோவை துடியலூர் அருகே பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் பள்ளி மேம்பாட்டுக்கு உறுதியளித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சமூக சேவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்கத் தலைவர் பி.பி.ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பேசிய அரிமா சங்கத் தலைவர் ஆறுச்சாமி, பள்ளியின் சுற்றுச் சுவரை விரைவில் சீரமைத்துத் தருவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு சீருடைகள், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஆறுமுகம், பட்டயத்தலைவர் ஏ.வி.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அரிமா சங்க முன்னாள் தலைவர்களான ராம மூர்த்தி, அய்யாசாமி, சுந்தர்ராஜ், தம்பு நாயக்கர் மற்றும் உறுப்பினர்களான ராஜா, சர்குணம், குமார், மகேஷ், முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் ஸ்மைலின் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...