கோவையில் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு: போலீசார் விசாரணை

கோவை சிவானந்தா காலனியில் மளிகை கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ரூ.15,000 பணம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கோவை சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் நள்ளிரவில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளர் மணிக்குமார் வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை மூடி வீட்டுக்கு சென்றார்.

காலையில் கடையை திறக்க வந்த போது, முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ.15,000 ரொக்கம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன.



இதனையடுத்து மணிக்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் இத்தகைய திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருடர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...