தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.



Coimbatore: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, உரிய அனுமதி பெற்று கட்சிக் கொடியை பறக்க விடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாக கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மேலும், அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும், காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி தங்களை அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்ததாக கூறிய அவர்கள், முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான குதுப்தீன், இது தொடர்பாக அளித்த பேட்டியில், தங்களது கட்சிக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் அலைக்கழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...