'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கடும் விமர்சனம்

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலையை அரசியல் கோமாளி என்று குறிப்பிட்டார்.



கோவை: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.



ராமச்சந்திரன் கூறுகையில், "திமுகவை பற்றி பேசினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எம்ஜிஆர்க்கு நாணயம் வெளியிட்டது மத்திய அரசுக்கு தான் பெருமை," என்றார்.

மேலும் அவர், "அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்து விடுகிறது. பயப்பட கூடியவர்கள் தான் பதற்றம் அடைவார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் பொழுது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அண்ணா அண்ணா என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை," என்று குறிப்பிட்டார்.

Go Back Modi என்று திமுக தொடர்ந்து செய்து வந்ததை சுட்டிக்காட்டிய ராமச்சந்திரன், "திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலை ரகசியமாக சந்தித்தார்? DMK Files என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.



அண்ணாமலையின் விவசாயி பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கிய ராமச்சந்திரன், "அண்ணாமலையே விவசாய நிலத்தை விற்று கொண்டு இருக்கிறார். ஆனால் தான் விவசாயி மகன் என்று கூறி கொள்கிறார். அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது அது தெரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

"20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும். அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை, YouTube Influencer," என்று ராமச்சந்திரன் சாடினார்.

பின்னர் அண்ணாமலை, பாஜக, திராவிட கட்சிகள் பற்றியும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புரிய வேண்டும் எனக் கூறி ஹிந்தியில் பேசினார். "முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிமுகவிலிருந்து யாரும் வரமாட்டார்கள்," என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமச்சந்திரன், "இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததில், முதலீடு இங்கு வந்திருக்கிறதா? வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறதா? இதற்கெல்லாம் முதலில் பதில் கொடுத்துவிட்டு செல்லட்டும். இல்லையென்றால் போய் வருவதற்கான அரசாங்க பணம்தான் வீண்," என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...