கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானவை: 14 மாத பஞ்சப்படி உயர்வு வழங்குதல், நீதிமன்ற தீர்ப்புகளை முழுமையாக அமல்படுத்துதல், 2022 டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.



போராட்டக்காரர்கள் தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நிதி இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கூறப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போராட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.



இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...