கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 43 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 43 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று (27.08.2024) நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 43 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.



பொதுமக்கள் அளித்த மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன. கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்கள், மேற்கு மண்டலத்தில் 8 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 10 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 3 மனுக்கள், மத்திய மண்டலத்தில் 10 மனுக்கள், மற்றும் பிரதான அலுவலகத்தில் 4 மனுக்கள் என மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டன.



மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இம்மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர நலஅலுவலர் (பொ) மரு.கே.பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன் (மத்தியம்), இளங்கோவன் (தெற்கு) (பொ), உஷாராணி (கணக்குகள்), முத்துசாமி (கிழக்கு), சந்தியா (மேற்கு), மோகனசுந்தரி (நிர்வாகம்), உதவிசெயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...